• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா தடுப்பு மருந்து எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை - தகவல்களை பரிமாறிக்கொள்ளும் மருத்துவர்கள்!

கொரோனா தடுப்பு மருந்து எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை - தகவல்களை பரிமாறிக்கொள்ளும் மருத்துவர்கள்!

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மருத்துவர்கள்

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மருத்துவர்கள்

சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோய்கள் இருப்பவர்களும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொள்வதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தங்கள் வாட்ஸ்அப் குரூப்களில் தகவல் பரிமாறிக் கொள்வதாகவும் அது மற்ற மருத்துவர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் ஊக்கமளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் மூன்றாவது நாளாக இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இன்று மருத்துவமனையின் இயக்குநர் விஜயா கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் . அவரைத் தொடர்ந்து செவிலியர்கள் மருத்துவ மாணவர்கள் கொரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொண்டனர்.

கொரோனா தடுப்பு போட்டுக் கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் விஜயா, " தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் நலமுடன் உள்ளனர். யாரையும் ஏமாற்றுவதற்காக இதனைக் கூறவில்லை. உண்மையிலேயே எந்தவித லேசான பாதிப்பு கூட யாருக்கும் ஏற்படவில்லை. நான் தடுப்பூசி போட்டுக் கொண்டு 30 நிமிடங்கள் ஆகின்றன. நான் நலமுடன் இருக்கிறேன்.

Also read... துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு!

எனவே அனைவரும் முன்வந்து இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோய்கள் இருப்பவர்களும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவர்கள் தங்கள் நலமுடன் இருப்பதாக வாட்ஸ் அப் குழுக்களில் தெரிவிக்கிறார்கள் அது மற்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது" என்றார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: