மாட்டுசாண தெரப்பி உடல் நலத்திற்கு கேடு தான் விளைவிக்கும் - மருத்துவர்கள் விளக்கம்!

மாதிரி படம்

மாட்டு சாணத்தில் 150 வகையான தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மாட்டு சாணத்தை உடலில் பூசிக் கொள்வதால், பல்வேறு வகையான தொற்று ஏற்படவே வாய்ப்பு இருப்பதாகவும், எந்த வகையிலும் அது கொரோனாவில் இருந்து பாதுகாக்காது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இயங்கி வரக்கூடிய ஒரு கோசாலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாட்டுச்சாண தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுதொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பகிரப்பட்டு, விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த தெரபியில் உடல் முழுவதும் மாட்டு சாணம், கோமியம் தேய்ப்பது, அதன் பின்னர் பால் மூலமாக அவற்றை கழுவுவது என செய்கின்றனர்.

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரமாக இருந்து வரக்கூடிய நிலையில், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர். மற்றொருபுறம் இதுபோன்ற அறிவியல் ரீதியாக இல்லாத தகவல்களை நம்பி பொதுமக்கள் பின்பற்றவும் செய்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூக்கில் எலுமிச்சை சாறு ஊற்றினால் மூச்சுத்திணறல் சரியாகும் என்று சமூக வலைதளங்களில் பரவிய தகவலை நம்பி, ஒருவர் அதை செய்து உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்தது.

இந்நிலையில் தற்போது மாட்டுசாண தெரப்பி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதுகுறித்து மருத்துவர் ரவீந்திரநாத் கூறுகையில், இது கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி உருவாக உதவாது. மாட்டு சாணத்தை உடலில் பூசுவதால் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது தொடர்பாக எந்த ஆராய்ச்சியோ பரிந்துரையும் இதுவரை இல்லை.

Also read... ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இலவசமாக உணவு வழங்கி வரும் அறக்கட்டளை

மாட்டு சாணத்தில் 150 வகையான தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும், எலிக்காய்ச்சல் கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பசுவை புனிதப்படுத்துவது நோக்கத்தில் இதுபோல் செய்யப்படுகிறது. இதுபோன்ற காலத்தில் இந்துத்துவத்தை, அரசியல் கருத்துகளை மூட நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கும் நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்படுகிறது. எனவே, பசு சாணம் என்பது எந்த வகையிலும் கொரோனாவில் இருந்து பாதுகாக்க பயனளிக்காது. அது உடல் நலத்திற்கு கேடு தான் விளைவிக்கும், என்றார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: