தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவுக்கும் டெங்குவுக்கும் ஒரே மாதிரி அறிகுறிகள்: கவனமாக இருக்க அறிவுறுத்தல்!

மாதிரிப் படம்

மழைக்காலம் என்பதால் டெங்கு அதிக அளவில் பரவ தொடங்கியுள்ளது. டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் விட்டு விட்டு வரும். கண்களுக்கு பின்னால் வலி இருக்கும், நீர் சத்து மிகவும் குறைந்து காணப்படுவர். ஆரம்ப கட்ட அறிகுறிகள் ஒரே மாதிரியாக தென்படும். எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

  • Share this:
தமிழகத்தில் பரவி வரும்  கொரோனாவுக்கும் டெங்குவுக்கும் ஒரே மாதிரி அறிகுறிகள்  இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தமிழகத்தில் மழைக் காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. கொரோனாவுக்கும் டெங்குவுக்கும் ஒரே மாதிரியான முதல் கட்ட அறிகுறிகள் இருக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் 2090 பேருக்கு டெங்கு பாதித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை இந்தியாவில் 6837 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. கர்நாடகாவில் 904 பேருக்கும், ஜார்கண்டில் 903 பேருக்கும், ராஜஸ்தானில் 826 பேருக்கும், மகாராஷ்ட்ராவில் 530 பேருக்கும் ஆந்திராவில் 461 பேருக்கும் டெங்கு இந்த ஆறு மாதத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டுகள் போல் அல்லாமல் கொரோனா பெருந்தொற்று காலத்தில் டெங்கு பரவுவதால் நோய் அறிகுறிகளை சரியாக கவனித்து மருத்துவ உதவி பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இது குறித்து பொது மருத்துவர் அஷ்வின் கருப்பன் கூறுகையில், " மழைக்காலம் என்பதால் டெங்கு அதிக அளவில் பரவ தொடங்கியுள்ளது. டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் விட்டு விட்டு வரும். கண்களுக்கு பின்னால் வலி இருக்கும், நீர் சத்து மிகவும் குறைந்து காணப்படுவர். ஆரம்ப கட்ட அறிகுறிகள் ஒரே மாதிரியாக தென்படும். எனவே கவனமாக இருக்க வேண்டும்" என்கிறார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 3,211 பேருக்கு கொரோனா பாதிப்பு: 57 பேர் உயிரிழப்பு
இதேபோல்  ’காய்ச்சல், உடல் வலி, அசதி போன்ற அறிகுறிகள் டெங்கு மற்றும் கொரோனா இரண்டு நோய்களின் அறிகுறிகள் ஆகும். டெங்கு பாதித்தவர்களுக்கு ரத்தம் உறையும் தன்மை குறையும். எனவே ஈறுகளில் ரத்தம் வரலாம். மேலும் வயிறு சம்பந்தப்பட்ட அறிகுறிகள் தென்படும் ’என்றுமருத்துவர் ஐஸ்வர்யா கூறுகிறார்.
Published by:Murugesh M
First published: