பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். மதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகளில் இருந்து விலகிய சரவணன் 4வது கட்சியாக அதிமுகவில் இணைந்துள்ளார். மதுரை மாவட்டத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்களில் டாக்டர் சரவணனும் ஒருவர். டாக்டர் சரவணன் பாஜகவில் செயல்பட்டு வந்த போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தின் போது பாஜகவிலிருந்து விலகினார். கடந்த 2022 ஆம் ஆண்டு காஷ்மீரில் மரணமடைந்த லெட்சுமணன் உடல் அவரது சொந்த ஊரான மதுரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வந்த போது பாஜகவை சேர்ந்தவர்கள் அவரது கார் மீது காலணி வீசினர்.
இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்த டாக்டர் சரவணன் மன்னிப்பு கேட்டு அன்று இரவே பாஜக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். டாக்டர் சரவணன் பாஜகவிலிருந்து விலகியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் திமுகவில் மீண்டும் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டாக்டர் சரணவன் இன்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பூங்கொடுத்து அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
டாக்டர் சரவணன் 2015 மதிமுகவில் இருந்து விலகி பின்னர் திமுகவில் 2016-ல் இணைந்து எம்.எல்.ஏவானார். அதன்பின் 2021 ஆம் அவருக்கு கட்சியில் சீட் கிடைக்காததால் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 2021 ஆம் பாஜகவில் இணைந்த அவர் ஓராண்டுக்குள் அந்த கட்சியில் இருந்து விலகி தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, BJP, Doctor Saravanan