Home /News /tamil-nadu /

எங்களை டார்சர் செய்கிறார்கள்... மருத்துவ தம்பதியினர் தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் தர்ணா

எங்களை டார்சர் செய்கிறார்கள்... மருத்துவ தம்பதியினர் தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் தர்ணா

மருத்துவ தம்பதி

மருத்துவ தம்பதி

Thoothukudi : கோவில்பட்டி மருத்துவத்துறை துணை இயக்குனர் மற்றும் கண்காணிப்பாளர் தங்களை டார்சர் செய்வதாக மருத்துவ தம்பதியினர் பரபரப்பு குற்றச்சாட்டு.

    தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் அரசு பொது மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர் ஆனந்த் மற்றும் அவரின் மனைவி மருத்துவர் வனிதா தம்பதியினர். தங்களது 5 வயது மகனுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து மருத்துவர் வனிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது கணவர் மருத்துவர் ஆனந்தும் தானும் கீழ ஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறோம்.  கடந்த ஐந்து வருடங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறோம்.

    தன்னை சாதி ரீதியாகவும், பெண் என்பதாலும் என்னிடம் எதையும் வெளிக்காட்ட முடியாததால் எனது கணவரை கடுமையான துன்புறுத்தலுக்கு கோவில்பட்டி மருத்துவத்துறை துணை இயக்குனர் போஸ்கோ ராஜா, கண்காணிப்பாளர் ராஜா இருவரும் சேர்ந்து தங்களை தொந்தரவுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.  எனது கணவரின் முகத்தில் பேப்பரை வீசி எறிந்து இரண்டு பேரையும் ‘வெளியே போ’ என சொல்லி அனுப்பி விட்டனர்.

    இதுகுறித்து  மருத்துவர் ஆனந்த் கூறுகையில், நான் 2017 இல் இருந்து கீழ ஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடமாடும் மருத்துவராக பணியாற்றி வருகிறேன். கண்காணிப்பாளர் ராஜா தூண்டுதலின்பேரில் கோவில்பட்டி மருத்துவத்துறை துணை இயக்குனர் போஸ்கோ ராஜா எனக்கு தேவையில்லாத மெமோ கொடுத்து வருகிறார்.

    இதுகுறித்து சென்னையைச் சார்ந்த எங்களது இயக்குனர்,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடர்ந்து நியாயம் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மருத்துவரான எங்களுக்கே இந்த நிலை என்ற காரணத்தினால் தரையில் அமர்ந்து நானும் எனது மனைவி மற்றும் குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழலை ஏற்படுத்தி விட்டனர் என வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

    Must Read : சென்னையில் தந்தையை கொன்று துண்டு, துண்டாக வெட்டிய மகன் - விலைக்கு இடம் வாங்கி சடலத்தை புதைத்த கொடூரம்

    தொடர்ந்து அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்க ஏற்பாடு செய்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மனு அளித்தனர். இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    செய்தியாளர் - முரளிகணேஷ்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Govt Doctors, Protest, Thoothukudi

    அடுத்த செய்தி