ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புயல் எச்சரிக்கை கூண்டுகள்... துறைமுகங்களில் எந்த எண் கூண்டு ஏற்றினால் என்ன அர்த்தம்?

புயல் எச்சரிக்கை கூண்டுகள்... துறைமுகங்களில் எந்த எண் கூண்டு ஏற்றினால் என்ன அர்த்தம்?

புயல் எச்சரிக்கை கூண்டு

புயல் எச்சரிக்கை கூண்டு

Storm warning cage | 11ம் எண் கூண்டு தான் உச்சபட்சமானது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    புயல் காலங்களில் எச்சரிக்கை கூண்டு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். இதில் புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? அதன் வகைகள் குறித்து பார்க்கலாம்.

    எத்தனை வகைகள் :

    புயல் காலங்களில் 1 முதல் 11 வரை புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றுவார்கள்.

    ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை :

    ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாக கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் பொருள்.

    புயல் எச்சரிக்கை

    இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை :

    இரண்டாம் எண் கூண்டு, புயல் உருவாகி உள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையை கண்டால் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

    இதையும் படிங்க : சென்னை அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம்

    மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை :

    3ம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பெய்யும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

    நான்காம் எண் புயல் எச்சரிக்கை :

    நான்காம் எண் புயல் கூண்டு துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்பதை குறிக்கும்.

    புயல் எச்சரிக்கை கூண்டு

    ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை :

    ஐந்தாம் எண் கூண்டு, புயல் உருவாகி இருப்பதை குறிக்கிறது. அதோடு துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

    ஆறாம் எண் புயல் எச்சரிக்கை :

    புயல் வலதுபக்கமாக கரையை கடக்கும்போது, துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படுத்தப்படும் என்பதை குறிப்பது ஆறாம் எண் புயல் கூண்டு ஆகும்.

    ஏழாம் எண் புயல் எச்சரிக்கை :

    ஏழாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையை கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

    எட்டாம் எண் புயல் எச்சரிக்கை :

    எட்டாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், மிகுந்த அபாயம் என்று பொருள். அதாவது புயல், தீவிர புயலாகவோ, அதிதீவிர புயலாகவோ உருவெடுத்து, துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம்.

    இதையும் படிங்க : வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… வட தமிழக மாவட்டங்களுக்கு அலெர்ட்

     ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை :

    9ம் எண் கூண்டுக்கு, புயல் தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள்.

    புயல் எச்சரிக்கை கூண்டு

    பத்தாம் எண் புயல் எச்சரிக்கை :

    10ம் எண் கூண்டு ஏற்றப்படுமானால், அதி தீவிர புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அருகே கடந்து செல்லும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று எச்சரிக்கப்படுகிறது.

    பதினோறாம் எண் புயல் எச்சரிக்கை :

    11ம் எண் கூண்டு தான் உச்சபட்சமானது. இது எதற்கு ஏற்றப்படுகிறது என்றால் வானிலை மையத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

    Published by:Karthi K
    First published:

    Tags: Cyclone, Tamilnadu, Weather News in Tamil