முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வகுப்புகளையே நடத்தாமல் கட்டணம் வசூலிப்பதா? கட்டணத்தை திருப்பித்தாருங்கள்: சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை

வகுப்புகளையே நடத்தாமல் கட்டணம் வசூலிப்பதா? கட்டணத்தை திருப்பித்தாருங்கள்: சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை

சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 4 மாதங்களுக்கு முன்பிருந்தே கல்விக் கட்டணம் வசூலிப்பதா? என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Last Updated :

கேந்திரிய வித்யாலயாவின் செயல் குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எழுதிய கடிதத்தில், 10 வது வகுப்பிற்கான கல்வி பிப்ரவரி 2021லேயே முடிந்து விட்டது. கோவிட்‌ இரண்டாம்‌ அலையால்‌ தேர்வு முடிவுகள்‌ தாமதமாகி ஆகஸ்ட்‌ 3, 2021ல்‌ தான்‌ அறிவிக்கப்பட்டது. அதற்கு பின்னர்‌ 11 ஆம்‌ வகுப்பு மாணவர்‌ சேர்க்கை துவக்கப்பட்டு ஆகஸ்ட்‌ இரண்டாவது வாரத்தில்‌ முடிக்கப்பட்டது.

ஆனால்‌ 11வது வகுப்பில்‌ சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல்‌ காலாண்டுக்கும்‌, இரண்டாவது காலாண்டில்‌ ஒன்றரை மாதத்திற்கும்‌ சேர்த்து ரூ.3150 கல்விக்‌ கட்டணம்‌ வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட்‌ மாதத்தில்‌ பள்ளியில்‌ சேர்ந்துள்ள மாணவனுக்கு ஏப்ரல்‌ மாதத்தில் இருந்து கல்விக்கட்டணம்‌ வசூலிக்கப்பட்டுள்ளது.

Also read: உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

11 ஆம்‌ வகுப்பில்‌ சேராத காலத்தில்‌ டியூசன்‌ கட்டணம்‌ 1200, வித்யாலயா விகாஸ்‌ நிதி 1500, கணினி கட்டணம்‌ 300, கணினி அறிவியல்‌ கட்டணம்‌ ரூ.150 என வகுலிக்கப்பட்டு ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சில பெற்றோர்‌ என்னை தொடர்பு கொண்டு புகார்‌ தெரிவித்துள்ளனர்‌.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வகுப்புகள்‌, கல்வி நடவடிக்கைகள்‌ எதுவுமே இல்லாத காலத்திற்கு கட்டணம்‌ என்பது முறையல்ல. பெற்றோரின்‌ புகார்‌ முற்றிலும்‌ நியாயமானது.

ஆகவே இதில்‌ தலையிட்டு வசூலித்த கட்டணத்தை திருப்பி தர வேண்டும்‌, இல்லாவிடில்‌ எதிர்கால கட்டணத்தில்‌ நேர்‌ செய்ய வேண்டும்‌ என்று அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்‌.

First published:

Tags: Kendriya vidyalaya school, Madurai, Su venkatesan