ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கம் இணைப்பா?

ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கம் இணைப்பா?

ரஜினிகாந்த் - தமிழருவிமணியன்

காந்திய மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை 3 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்த திட்டம்.

 • Share this:
  காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்து காந்திய மக்கள் இயக்கம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

  இது குறித்து காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பா. குமரய்யா விடுத்துள்ள அறிக்கையில், ‘காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், கோவை மாவட்ட இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் 37 வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த 85 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  இந்த கூட்டத்தில் திரு தமிழருவி மணியன் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார். இந்தக் கூட்டம், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் அவர்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.

   

  மேலும் படிக்க... கல்லூரி மாணவர்களுக்கு நாள்தோறும் 2 ஜிபி டேட்டா கார்டு இலவசம் - முதல்வர் பழனிசாமி

   

  அதன் அடிப்படையில் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக திரு.தமிழருவி மணியன் அவர்கள் தொடர்கிறார். காந்திய மக்கள் இயக்கத்தின் அன்றாட செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் இயக்கத்தின் மாநில செயல் தலைவராக கோவையைச் சேர்ந்த டாக்டர் திரு.டென்னிஸ் கோவில் பிள்ளை அவர்களும், மாநிலத் துணைத் தலைவராக ஓகே டெக்ஸ் கந்தசாமி அவர்களும், மாநிலப் பொதுச் செயலாளராக குமரய்யா அவர்களும் மாநிலப் பொருளாளராக திரு.நாகராஜன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  காந்திய மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை 3 லட்சத்திலிருந்து 10 லட்சமாக, அடுத்த ஆறு மாதங்களில் உயர்த்துவதற்கான களப்பணியை இந்த நிர்வாகக் குழு முனைப்புடன் செயல்படுத்தும்.

  நேற்று (10-01) இரவு சில செய்தி காட்சி ஊடகங்களில், காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பதாக வந்த செய்தி கற்பனையானது. காந்திய மக்கள் இயக்கம் தனித்து இயங்கும். ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கத்தின் தொடர்பு, சகோதர பாசத்துடன் நீடிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: