ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எங்களை மீண்டும் குற்றப்பரம்பரை ஆக்கிவிட வேண்டாம்: பாரதிராஜா ஆவேசம்!

எங்களை மீண்டும் குற்றப்பரம்பரை ஆக்கிவிட வேண்டாம்: பாரதிராஜா ஆவேசம்!

பாரதிராஜா

பாரதிராஜா

  • News18
  • 1 minute read
  • Last Updated :

வைரமுத்து விவகாரத்தில் தங்களை மீண்டும் குற்றப்பரம்பரையினர் ஆக்கிவிட வேண்டாம் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா இசையில் வேலு பிரபாகரின் இயக்கத்தில் உருவாகும் கடவுள் 2 திரைப்படத்தின் துவக்க விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, ஆண்டாள் குறித்து பேசியதற்காக வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும் போராட்டம் ஏன் நடத்த வேண்டுமென கேள்வி எழுப்பினார். மதம் என்பது தங்களுக்கு எப்போதுமே கிடையாது என்றும் அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேச வேண்டாம் என்றும் பாரதிராஜா தெரிவித்தார்.

வைரமுத்துவை காரணம் காட்டி கொல்லைப்புறமாக வர நினைத்தால் அந்த ஆசை ஒருபோதும் நிறைவேறாது என குறிப்பிட்ட அவர், மீண்டும் தங்களை குற்றபரம்பரையாக்கி விட வேண்டாமென கூறினார். வைரமுத்து நாக்கிற்கு விலை வைத்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்திய பாரதிராஜா, இனியும் வைரமுத்து பற்றி வசை பாடினால் அவர்கள் தலையை தானே துண்டிப்பேன் என்று ஆவேசமாக கூறினார்.

First published:

Tags: Aandal row, Bharathiraja, Ilaiyaraja, Kadavul 2, Nainar Nagendran, Seeman, Vairamuthu