Mekedatu project | மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும்: எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Youtube Video

காவிரியின் குறுக்கே மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

  • Share this:
    மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், மேகதாது அணையால் தமிழகம், கர்நாடகம் இரு மாநிலமும் பயன்பெறும் என அவர் குறிப்பிடிருந்தார். எடியூரப்பாவின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஸ்டாலின், மேகதாது அணை திட்டத்தை கர்நாடகா கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், தமிழக விவசாயிகள் இதை ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... இந்தியாவில் கூடுதலாக 2 தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள் விரைவில் அமைக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு



    மேலும், மேகதாது அணைக்கும் பெங்களூருவுக்கு இடையே மிக நீண்ட தூரம் இருப்பதால் பெங்களூரூ மக்களின் குடிநீர் தேவைக்காக மேகதாது அணை கட்டப்படுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தமிழகத்தின் நீர் மின் திட்டங்களால் நீர் சேமித்து வைக்கப்படுவதில்லை என்பதால், இதனை மேகதாது அணையுடன் இணைத்துப் பேசுவது பொருத்தமானது இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் கர்நாடக அரசுடன் நல்ல உறவையே தமிழக அரசு விரும்புவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published: