சாலைகளில் பாதுகாப்பு பணியில் பெண் போலீசார் ஈடுபட வேண்டாம்: டி.ஜி.பி. திரிபாதி

மாதிரி படம்

வழிநெடுக பெண் போலீசார் காத்திருப்பதை தவிர்க்க காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து மண்டல ஐஜி, ஆணையர்கள், அதிகாரிகளுக்கு டி,ஜி,பி, திரிபாதி அறிவுறுத்தியுள்ளார்.

 • Share this:
  சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் போலீசார் ஈடுபட வேண்டாம் என்று டிஜிபி திரிபாதி விலக்கு அளித்து வாய்மொழி உத்தரவிட்டுள்ளார்.

  பிரதமர், முதல்வர் உள்ளிட்ட, முக்கிய பிரமுகர்கள் செல்லும் இடங்களில், உளவுத்துறை, சட்டம் ஒழுங்கு போலீசார் முன்னதாகவே சென்று ஆய்வு பணியில் ஈடுபடுவது வழக்கம். இதற்கான ஆயத்த பணிகள் நடக்கும் போதே அவர்கள் செல்லும் வழித்தடத்தில் சாலைகளில் வரிசையாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். இவர்கள் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

  மேலும் படிக்க... ஊரடங்கால் நாமக்கல் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலை

  இந்த பணியில் பெண் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். சாலைகளில் பணிபுரியும் போது இவர்களுக்கு குடிக்க தண்ணீர் கூட கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இயற்கை உபாதையை கழிக்க வசதியின்றி தவித்தனர்.

  கொரோனா பரவல் காரணமாக பெண் போலீசாருக்கு இலகுவான பணி தான் ஒதுக்கப்பட்டும், கர்ப்பிணி போலீசாருக்கு விடுப்பும் அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் வழி நெடுக பெண் போலீசார் காத்திருப்பதை தவிர்த்து அவர்களுக்கு வேறு பணி வழங்க தமிழ் நாடு காவல் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதையடுத்து முதல்வர் உள்பட முக்கிய பிரமுகர்கள் செல்லும் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில் இருந்து பெண் போலீசாருக்கு விலக்கு அளித்து தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மண்டல ஐஜிக்கள், காவல் ஆணையர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: