ஆதி திராவிடர் என்ற பொது அடையாளம் வேண்டாம் - வள்ளுவர் சமூக அமைப்பு வலியுறுத்தல்

ஆதி திராவிடர் என்ற பொது அடையாளம் வேண்டாம் - வள்ளுவர் சமூக அமைப்பு கோரிக்கை

தங்களை ஆதி திராவிடர் என்ற அடையாளத்தில் இணைக்கக் கூடாது என்று வள்ளுவர் சமூகத்தினர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

  • Share this:
கடந்த மாதம் 24ம் தேதி காணொளிக் காட்சியில் நடந்த கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை ஆதி திராவிடர் என அடையாளப்படுத்த வேண்டும் என்ற பொருளில் பேசியிருந்தார்.

Also read: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி குழந்தையுடன் டிஜிபி அலுவலகம் முன்பு தர்ணா செய்த பெண்..

இந்த நிலையில், அவருடைய பேச்சை சுட்டிக்காட்டி முதல்வருக்கு வள்ளுவர் சமூக அமைப்புகள் கடிதம் அனுப்பியுள்ளன. அதன் பிரதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்புகள் அளித்த கடிதத்தில், தாங்கள் திருவள்ளுவர் தோன்றிய வள்ளுவர் இனத்தில் பிறந்ததாகவும், தங்களை அரசியல் அமைப்புகளும் சமூக அமைப்புகளும் ஆதி திராவிடர் என்ற பொதுவான அடையாளத்தில் சேர்க்க முயற்சிப்பதாகவும் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தங்களை எந்தவொரு பட்டியல் சாதியோடும், பிற சாதியோடும் தொடர்புபடுத்தாமல் வள்ளுவர் என்றே சொல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளனர்.
Published by:Rizwan
First published: