ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

"துப்பாக்கியை எடுக்க தயங்காதீங்க.." போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை

"துப்பாக்கியை எடுக்க தயங்காதீங்க.." போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை

சைலேந்திர பாபு

சைலேந்திர பாபு

வெளிமாநிலங்களிலிருந்து வரும் கஞ்சாவை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது சவாலாக இருப்பதாகவும் சைலேந்திர பாபு கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும்போது, போலீஸார் மீது தாக்குதல் நடத்தினால், துப்பாக்கியை பயன்படுத்தவும் தயங்கக் கூடாது என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை வழங்கியுள்ளார்.

நெல்லைக்கு பயணம் மேற்கொண்ட டிஜிபி சைலேந்திர பாபு, மாவட்ட காவல் ஆயுதப்படையில் நகர்ப்புறப் பகுதிகளுக்கான புதிய ரோந்து வாகனத் திட்டத்தை தொடங்கிவைத்ததுடன், ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு அறையை திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டில் 23 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 2,635 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

திரிபுரா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு கஞ்சா வருவதாகவும், வெளிமாநிலங்களிலிருந்து வரும் கஞ்சாவை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது சவாலாக இருப்பதாகவும் சைலேந்திர பாபு கூறினார். நெல்லை சரகப் பகுதியில் ஜாதிய ரீதியிலான மோதல்கள் மற்றும் கொலைகளைத் தடுக்க மூன்று அடுக்கு கண்காணிப்புத் திட்டத்தை தொடங்கியிருப்பதாக டிஜிபி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கூலிப்படைக்கு எதிராக சிறப்புப் படை உருவாக்கப்பட்டு, கூலிப்படை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். காவல் துறையினரை தாக்கும் குற்றவாளிகள் மீது துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாகவும் சைலேந்திர பாபு தெரிவித்தார்.

First published:

Tags: Gun, Gun shot, Sylendra Babu, Tamilnadu police