Home /News /tamil-nadu /

டாக்டர் பரிந்துரை இல்லாமல் காய்ச்சலுக்கு மருந்து தரக்கூடாது... மருந்து கடைகளுக்கு அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவுரை...

டாக்டர் பரிந்துரை இல்லாமல் காய்ச்சலுக்கு மருந்து தரக்கூடாது... மருந்து கடைகளுக்கு அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவுரை...

எழும்பூர் மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

எழும்பூர் மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

தமிழகத்தில் 243 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
தமிழகத்தில் இதுவரை 282 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் அதிகரித்து படுக்கை வசதிகள் இல்லாமல் மருத்துவமனைகள் நிரம்பி வருவதாக தவறான தகவல்களை சிலர் பரப்பி வருவதாக குற்றச்சாட்டினார்.

எழும்பூர் அரசு நல மருத்துவமனையில் 129 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 18 பேர் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். இதில் யாருக்கும் பன்றிக் காய்ச்சல் இல்லை சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் பன்றிக் காய்ச்சலாக இருந்தாலும் அதற்கான மருந்துகளை மருந்து கடைகளில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தரக் கூடாது என எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: தீபாவளி பண்டிகையொட்டி விண்ணை முட்டும் ஆம்னி பேருந்து கட்டணம்! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

தமிழகத்தில் இதுவரை 282 பேருக்கு பன்றிக்காய்ச்சல் மற்றும் 243 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கூறியுள்ள அமைச்சர் சுப்பிரமணியன் குழந்தைகளுக்கு இரும்பல், தும்பல், சளி இருந்தால் உடனே மருத்துமனையை அனுக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கைகளை சுத்தம் செய்வது, முககவசம் அணிவது உள்ளிட்ட கொரோன விதிமுறைகளை முறையாக பின்பற்றியதால்  மற்ற காய்ச்சல் பரவாமல் இருந்ததாக மா.சுப்பிரமணியன் விளக்க அளித்தார்.

மேலும் Influenza நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமல்,  தும்மலில் இருந்து  வெளியேறும் நீர் திவலைகள் மூலம் மற்றவருக்கு பரவக் கூடும். எனவே குழந்தைகளை பெற்றோர்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குழந்தைகளை கொசு வலைகளில் படுக்க வைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

 
Published by:Arunkumar A
First published:

Tags: Chennai, Children, Dengue fever, Minister Ma.Subramanian, Swine Flu, Tamilnadu

அடுத்த செய்தி