• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுகொண்டுள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா 2வது அலை மே, ஜூன் மாதங்களில் உச்சம் தொட்டது. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகிறது. இதனால், மூன்றாவது அலை குறித்து அச்சம் எழுந்துள்ளது.

    இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 'மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள் என கடுமையாக கேட்டுக்கொள்கிறேன்'' என பேசியுள்ளார்.

    Also read: அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டாம்: சென்னை மாநகராட்சி

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ''கூட்டம் கூடுவதால் கொரோனா பரவ மக்களே காரணமாகி விடக்கூடாது. மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள். கொரோனா என்ற பெரும் தொற்று கடந்த பதினெட்டு மாத காலமாக நாட்டையும் நாட்டு மக்களையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.



    மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசு ஏற்படுத்தியுள்ள மருத்துவ கட்டமைப்புகள், ஊரடங்கு கட்டுப்பாடுகள், நம்முடைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடைய தன்னலம் கருதாத சேவை ஆகியவற்றின் காரணமாக கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தி இருக்கிறோம்.

    கட்டுப்படுத்தி இருக்கிறோமே தவிர முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை. கொரோனா என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று நோயாக இருப்பதால் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும், முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்படும் நாடுகளில்கூட மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கேரளா, கர்நாடகா போன்ற நமது அண்டை மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. மக்கள் தொகை அதிகமாகவும், நெரிசலாக உள்ள சூழல் உள்ள நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் மக்களை காக்கின்ற பெரும் பொறுப்பு அரசின் கையில் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறோம்.

    ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது, லேசாக பரவ தொடங்குகிறது. இதனை கவனத்தில் வைத்து மக்கள் செயல்பட வேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: