அரசு வேலைக்கு யாரையும் நம்பி பணம் கொடுக்க வேண்டாம் என்றும், அரசு அனுமதித்துள்ள கட்டணத்தை மீறி வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது புகார் கொடுக்க பெற்றோர்கள் முன் வரவேண்டும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்..
நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட கூடிய சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக கல்வி துறை அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமைச் செயலகம் வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, “நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளிகள் முழுவதும் தூய்மையாக
இருக்க அறிவுறுத்தபட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது பள்ளி கல்வித்துறை.
9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டதோ அதே நடைமுறை இதிலும் பின்பற்றப்படும். பள்ளிகள் திறப்பிற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தொடர்ந்து துறை ரீதியாக நடைபெறும் பணிகள் அனைத்தும் கண்காணிக்கப்படும் என்றார்.
குழந்தைகள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். அதனை சரியான முறையில் கண்காணிக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்றும் மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என்றார்.
Also Read: நபிகள் நாயகம் குறித்து கருத்து: பெண் தலைமையாசிரியருக்கு மரண தண்டனை!
மேலும், யாரை நம்பியும் அரசு வேலைக்காக பணம் கொடுக்க வேண்டாம். தயவு செய்து இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இது தொடர்பாக விழிப்புணர்வுடன் இருங்கள் என அறிவுறுத்தினார். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்க முன் வாருங்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் அளிக்க தைரியமாக முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் மேலும் புகார் அளிக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் உத்தரவாதம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்றல் குறைபாடு தொடர்பாக மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும் காலாண்டு அரையாண்டு தேர்வு மாணவர்கள் வருகை பதிவு பொறுத்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.
9-12 வகுப்புகளுக்கு காலாண்டு அரையாண்டு தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தற்போது பள்ளி அளவில் சிறு சிறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் முழு எண்ணிக்கையில் பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலை உள்ளது. மாணவர்கள் வருகை அதிகரிக்க உடன் தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கட்டிடங்கள் ஆய்வு செய்யவும் உத்திரவிட்டுள்ளோம்.
மாணவர்களே நம்பி பள்ளிக்கு வாருங்கள் உங்களை காக்க வேண்டியது அரசின் கடைமை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Government school, School Reopen