நீட் வைத்து அரசியல் செய்யாதீர்கள்.. தைரியம் இருந்தால் வெள்ளை அறிக்கை விடுங்கள் -முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்

அண்ணாமலை - மு.க.ஸ்டாலின்

நீட் எதிராக தீர்மானம் கொண்டு வந்தாலும் எதுவும் செய்ய முடியாது என அண்ணாமலை கூறியுள்ளார்.

 • Share this:
  தலைகீழாக நின்று தீர்மானம் கொண்டு வந்தாலும் நீட், வேளாண் சட்டம், குடியுரிமை திருத்த சட்டத்தில் திமுக அரசால் எதுவும் செய்ய முடியாது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

  சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  சேலத்தில்  ஒரு துயரமான துர்திஷ்டவசமான சம்பவம் நடந்து உள்ளது. மாணவன் தனுஷ் தனது உயிரை மாய்த்து கொண்டான். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வது மட்டுமில்லாமல் தலைவர்களுடன் அவரது வீட்டிற்கு சென்று பெற்றோரை சந்தித்து பேச உள்ளோம். இந்த சம்பவத்திற்கு யார் காரணம். பல கனவுகளுடன் தேர்வுக்கு தயாரான மாணவன் உயிரிழக்கிறார். இதற்கு முன் என்ன நடந்தது. நீட்டை வைத்து மிகப்பெரிய அரசியல் நடக்கிறது. இதை தெளிவுப்படுத்துவது பா.ஜ.க.வின் நோக்கம்.

  தமிழக சட்டமன்றத்தில் நீட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்து உள்ளனர்.  நீட்டிற்கு மட்டுமல்ல. நீட்டை வைத்து செய்யும் அரசியல் வியாபாரத்தை கண்டித்தும் வெளிநடப்பு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அனிதாவில் ஆரம்பித்து தனுஷ் வரை 14 உயிர்கள் போய் இருக்கிறது. 2010ம் ஆண்டு அப்போதைய திமுக அமைச்சர் காந்திசெல்வன் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வருவதாக கூறினார். மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள் ஒரு தேர்வை எழுதி மருத்துவ கனவை நினைவாக்கி கொள்ளலாம் என 2010ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

  Also Read: ஸ்டாலின் போல் ஒரு முதல்வரை பார்க்க முடியாது - எச்.ராஜா விமர்சனம்

  அப்போது காங்கிரஸ் ஆட்சியில் திமுக இருந்தது. திமுகவை சேர்ந்த காந்தி செல்வன் சுகாதார துறை இணை அமைச்சராக இருந்தார். இதை சுப்ரீம் கோர்ட்டில் எதிர்த்து தனியார் மருத்துவ கல்லூரியை சேர்ந்தவர்கள் மனு தாக்கல் செய்தனர். 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீட் செல்லும் என்ற தீர்ப்பை அளித்தனர். இதை எதிர்த்து 3 நீதிபதி கொண்ட அமர்வுக்கு சென்ற போது 2 நீதிபதிகள் ஒரு கருத்தும் ஒரு நீதிபதி ஒரு கருத்து தெரிவித்தனர். 2013ம் ஆண்டு அப்பீல் செய்யப்பட்டது. 2104ம் ஆண்டு தான் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. நீட்டை கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுக ஆட்சியாக இருந்தாலும் கூட நீட் ஏழை, நடுத்தர மக்களுக்கு வரபிரசாதமாக இருந்து கொண்டு இருக்கிறது. விலக்கு கேட்டபோது தரப்பட்டு நீட் நடந்து கொண்டு இருக்கிறது.

  உச்ச நீதிமன்றம்


  சட்டமன்றத்தில் மக்களை குழப்பி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் குழம்பி அவர்கள் கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானத்திற்கு வாக்கு அளித்து உள்ளனர். அப்போதைய திமுக அமைச்சர் தான் முறையை மாற்றினார் என்பதை மறந்து அரசியல் பேசுகின்றனர். நீட் தேர்வு 2016ல் இருந்து நடந்து வருகிறது. 2019ம் ஆண்டு 1017 மாணவர்கள் தமிழ் வழி கல்வியில் நீட்டை எழுதினார்கள். 2020ம் ஆண்டு 17 ஆயிரம் மாணவர்கள் தமிழ் வழியில் எழுதி உள்ளனர். 2019ம் ஆண்டு 44 சதவீதமாக இருந்த நீட் தேர்ச்சி 2021ம் ஆண்டு 57.44 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. நீட்டை தமிழக மக்கள் ஏற்று கொண்டு விட்டார்கள். 2019, 2020ம் ஆண்டுகளில் தமிழக பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டு நீட் தேர்வு அளவு கோலுக்கு வந்து உள்ளது.

  Also Read:  அடுத்த முறை முன்னாள் எம்எல்ஏவாக ஆகிவிடுவோமோ என்னவோ.. துரைமுருகன் பேச்சால் அவையில் சிரிப்பலை!!

  திமுக பயன்படுத்தும் ஒரே வார்த்தை சமூக நீதி. பா.ஜ.க.வின் தலைவராக முதலமைச்சரை கேட்கிறேன். நீட் விவகாரத்தில் 2006-15 ஆண்டு வரை வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்யுங்கள். நீட்டிற்கு முன்னால் தமிழக அரசு பள்ளியில் படித்த எத்தனை மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து உள்ளார்கள் என்பதை தெரிவியுங்கள். வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ததால் மக்களுக்கு முழு விவரமும் தெரியவரும். 10 வருடத்தில் மொத்தமாக 190 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் எத்தனை பேர் சொந்தமாக மருத்துவ கல்லூரிகளை நடத்துகின்றனர் என்பதை வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அதில் நிர்வாக ரீதியாக எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பதை தெரிவிக்க வேண்டும்.

  முதல்வர் ஸ்டாலின்


  அரசியல் கட்சியாக அரசியல் பேசுகின்றனர். இறந்து போன மாணவனை வைத்து அரசியல் செய்கிறீர்கள். தைரியம் இருந்தால் வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள். இது வரை வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன். நீதியரசர் கமிட்டியை வைத்து நீங்களே 80 ஆயிரம் பேர் என்று சொல்கிறீர்கள். நீட் தேர்வில் 1 லட்சத்தி 10 ஆயிரம் மாணவர்கள் எழுதி உள்ளனர். யாரும் எந்த குறையும் சொல்ல வில்லை. அரசியல் செய்து அதில் மாணவர்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையான நேர்மையாக தலைவராக இருந்தால் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்யுங்கள். வாய் கூசாமல் சட்டமன்றத்தில் பொய் சொல்வது ஏன். தனுஷ் மரணத்திற்கு முழு பொறுப்பு திமுக தலைவர்கள். போலீஸ் டி.ஜி.பி, சேலம் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நீட்டை வைத்து அரசியல் செய்து பொய் வாக்குறுதி தந்தார்களோ அவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்சவர்களாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

  Also Read: தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளை பார்த்து வியந்த மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர்!

  திமுகவில் பலர் ரகசியம் தெரியும். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் காணாமல் போய் விடும் என்றார்கள். நீட்டை எல்லோரும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என கடந்த 8 மாதமாக சொல்லி வருகிறேன். சுப்ரீம் கோர்ட்டில் நீட் சட்டமைப்பு படி செல்லுபடி என கூறியதை தான் செய்கிறோம். 2021ம் ஆண்டு 435 அரசு மாணவர்கள் நீட் மூலமாக மருத்துவ கல்லூரிக்கு சென்று உள்ளனர். 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வேண்டாம் என்றாலும் கடந்த காலங்களை விட அதிகமாக தான் இருக்கும். ஒட்டு வாங்கி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பொய்யை சொன்ன திமுக தலைவர்கள் மீது போலீஸ் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் முலம் தனுஷ் மரணத்திற்கு தரக்கூடிய நீதியாகும். இதை அரசியலாக பேசி செல்ல கூடாது.

  அரசியல் வாதிகள் பொறுப்பில்லாமல் மாறி கொண்டு இருக்கிறார்கள். பொய்யை பேசி ஒட்டு வாங்க முடியும் என நினைக்கிறார்கள். அரசியல் தலைவர்களுக்கு தெரியட்டும் அறம், நீதி, நியாயம் இருக்கிறது என்று தெரியவேண்டும். திமுக வெள்ளை அறிக்கை வெளியிட்டு விவாதம் செய்ய தயார். நீட்டை காங்கிரஸ்-திமுக கொண்டு வந்தாலும் ஏழை மாணவர்களுக்கும்   தமிழக மக்களுக்கும் சமூக நீதிக்கும் எதிரானது கிடையாது என்பது பா.ஜ.க.வின் கொள்கை ஆகும்.

  நீட் தேர்வு


  தேர்தல் காலத்தில் நீட்டை வைத்து யாராலும் அரசியல் செய்தார்களோ மக்களிடத்தில் பொய்யை சொல்லி ஒட்டு வாங்கி எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் ஆக வேண்டும் என்ற நிலைமை பா.ஜ.க.விற்கு கிடையாது. நாட்டு மக்களுக்கு தமிழக மக்களுக்கு எது நல்லதோ அதை உரக்க சொல்லுவோம். மக்களிடம் நஞ்சை விதைத்தால் எதிரான கருத்தாக இருந்தாலும் பா.ஜ.க. தெளிவாக இருக்கிறது. ஏழை மாணவன் பணம் கொடுக்காமல் அரசு மருத்துவ கல்லூரியில் அரசியல்வாதியை நாடாமல் சென்று படிக்க முடியும் என்றால் அரு நீட்டால் தான். கூடிய விரைவில் மக்களின் மனசு மாறும். ஏழை மக்களுக்காக தொண்டு செய்ய கூடிய தலைவர் மோடி, பா.ஜ.க. கட்சி. பொய் சொல்லி அரசியலுக்கு வரக்கூடிய தல்ல. அரசியல் பிழைத்தவர்களுக்கு அறம் கூற்றாகும். பொய் சொல்லி பதவியில் இருக்க கூடிய அனைத்து தலைவர்களுக்கும் பொருந்தும். மனசாட்சி படி தனுஷ் மரணத்திற்கு யார் காரணம் என தெரிய வரும்.

  நீட் எதிராக தீர்மானம் கொண்டு வந்தாலும் எதுவும் செய்ய முடியாது. தலைகீழாக நின்று தீர்மானம்  கொண்டு வந்தாலும் நீட் தேர்வு நடக்கும். தலைகீழாக நின்று தீர்மானம் கொண்டு வந்தாலும் 3 விவசாய சட்டங்கள் தமிழகத்தில் இருக்கும். தமிழக விவசாயிகள் இந்தியா முழுவதும் விவசாய பொருட்களை அனுப்புவார்கள். உலகம் முழுவதும் அனுப்பப்படும். தமிழக விவசாயிகள் தரம் உயருவதை திமுக அரசால் தடுத்து நிறுத்த முடியாது. இது போல் தான் குடியுரிமை திருத்த சட்டத்திலும் நிறுத்த முடியாது. திமுக அரசால் எதுவும் செய்ய முடியாது. முடியாது என்று தெரிந்தும் விஷத்தை விதைக்கின்றனர். உச்சநீதிமன்றத்தில் 3 முறை ஆய்வு செய்த தீர்ப்பு. அரசியலமைப்பு சட்டத்தின் படி உண்மையாக உள்ள சட்டம். நீட் தேர்வு தேர்ச்சியில் தமிழகம் இந்தியாவில் சிறந்த மாநிலம். 2016 முதல் 18 வரை நீட் தேர்வில் பிரச்சனை இருந்தது. இப்போது எந்த குழப்பமும் கிடையாது.” இவ்வாறு அவர் கூறினார்.

  செய்தியாளர்: சுரேஷ் 

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Ramprasath H
  First published: