முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் மற்றும் அதன் உண்மைத் தன்மை சரிபார்ப்புப் பணியினை நிலுவையின்றி விரைந்து முடித்திட முதலமைச்சர் அறிவுறுத்தல்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஆதி திராவிடர், பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

அப்போது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.

அரசின் நலத்திட்ட உதவிகளை எந்தவித தாமதமும் இன்றி, உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் என்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக நில நிர்வாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி, வேலைவாய்ப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம், கல்வி உதவித்தொகை ஆகியவற்றை எவ்வித தாமதமுமின்றி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் மற்றும் அதன் உண்மைத் தன்மை சரிபார்ப்புப் பணியினை நிலுவையின்றி விரைந்து முடித்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

First published:

Tags: CM MK Stalin, Scheduled caste, Welfare scheme