• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரேஷன் கடைகளில் கூட்டத்தை கூட்டாதீர்கள்! - முதல்வருக்கு கிருஷ்ணசாமி கோரிக்கை

ரேஷன் கடைகளில் கூட்டத்தை கூட்டாதீர்கள்! - முதல்வருக்கு கிருஷ்ணசாமி கோரிக்கை

ரேஷன் கடை

ரேஷன் கடை

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது, இன்று முதல் அது கடுமையாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. இச்சூழலில் கொரோனா நிவாரண நிதிகளை கூட்டம் கூட்டி ரேஷன் கடைகளில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை.

  • Share this:
    கொரோனா நிவாரண நிதிகளை வழங்க ரேஷன் கடைகளில் கூட்டத்தை கூட்ட வேண்டாம் என முதல்வருக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

    திமுக தேர்தல் அறிக்கையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆட்சி அமைத்ததும் முதல் கையெழுத்தாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட்டார்.

    இதனிடையே, தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் பலரும் வருமானம் இழந்து தவித்து வரும் நிலையில், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு முதல் தவணையாக இந்த மாதம் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், இன்று முதல் ரேஷன் கடைகளில் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள் திட்டத்தை துவங்கி வைத்தனர். இந்த நிவாரண நிதியை பெறுவதற்கு அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்தாலும், மக்கள் அதனை பெறுவதற்கு கூட்டமாக கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கொரோனா நிவாரண நிதிகளை வழங்க ரேஷன் கடைகளில் கூட்டத்தை கூட்ட வேண்டாம் என முதல்வருக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவுகிறது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது, இன்று முதல் அது கடுமையாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது.

    இச்சூழலில் கொரோனா நிவாரண நிதிகளை கூட்டம் கூட்டி ரேஷன் கடைகளில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கிலேயே செலுத்தலாம். எல்லா நிவராணங்களும் வீடுகளுக்கு நேரடியாக சென்றடையட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: