காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ வேண்டாம் - வருவாய்துறை ஆணையர் கோரிக்கை

காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ வேண்டாம் - வருவாய்துறை ஆணையர் கோரிக்கை
காவிரி ஆறு
  • Share this:
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் நிலையில் காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ வேண்டாம் என வருவாய்த்துறை ஆணையர் சத்யகோபால் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

நீர் திறப்பு அதிகரிக்கும் என்பதால் ஆற்றுப் பகுதியில் செல்பி எடுக்க கூடாது என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


காவிரி, அமராவதி, பவானி உள்ளிட்ட ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைத் தேவைப்பட்டால் வெளியேற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்ப சமூக வலைதளங்களையும், ஊடகங்களையும் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறித்து மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வருவாய்த்துறை ஆணையர் சத்யகோபால் குறிப்பிட்டுள்ளார்.Also watch

First published: August 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்