கொரோனா தொற்று பரவல் காரணமாக
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவை நேரில் காண பொதுமக்கள் உள்ளிட்டோர் வருவதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் காலை 8 மணிக்கு நடைபெறும் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக்கொடியை பறக்கவிடுகிறார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்துமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில், பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் சென்னையில் நடைபெறும் விழாவை நேரில் காண வருவதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், குடியரசு தின விழாவை கொண்டாடும் வகையில், சென்னை விமான நிலையம் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒளி வெள்ளத்தில் மிதந்தது. மேலும், 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Read More : ரேஷன் கடையில் கைரேகை பதிவதில் சிக்கல்.. தமிழக அரசு சூப்பர் உத்தரவு
சென்னை விமான நிலையத்தில் முக்கிய பண்டிகைகளின் போது, பயணிகளுடன் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், குடியரசு தினத்தை ஒட்டி, விமான நிலைய கட்டடங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.
Must Read : இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் : தமிழக மீனவர்கள் வெட்டுக் காயத்துடன் சிகிச்சை
குறிப்பாக, மூவர்ண வண்ண விளக்குகளால் கட்டங்கள் மிளிர்ந்தன. இதை கண்டு வியந்த பயணிகள், மின் விளக்குகளுக்கு முன்பு நின்றுகொண்டு, தங்களது செல்போன்களில் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.