அண்ணாமலை கட்டி இருக்கும் வாட்ச் குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே வார்த்தை போர் தற்போது அதிகமாகியுள்ளது.
நேற்று அவர், தான் கட்டியிருக்கும் கைகடிகாரம் 3.5 லட்சம் எனவும் அதை கட்டியுள்ளதானல் தான் தேசியவாதி எனவும் தெரிவித்தார். இந்த பேட்டிக்கு பின், ஆட்டுக்குட்டிகளை மட்டுமே சொத்தென சொல்லும் அண்ணாமலை 5 லட்ச ரூபாய்க்கு மேல் விலையுள்ள வாட்ச்சை கட்டி இருக்கிறார்.
ஆட்டுக்குட்டிகளை மட்டுமே வைத்திருக்கும் அவரின் சொத்தின் அளவு உயர்ந்தது எப்படி? அந்த கடிகாரம் வாங்கிய ரசீதை வெளியிட முடியுமா என ட்விட்டர் பதிவின் முலம் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதையும் படிக்க : அண்ணாமலை வாட்ச் ரூ. 5 லட்சம்.. ரசீதை வெளியிட தயாரா? சவால் விடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!
இதற்கு பதிலளிக்கும் வகையில் சொத்துக்கணக்குகளை வெளியிட தான் தயார் எனவும், அதே போல சொத்து விவரங்களை வெளியிட திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தயாரா என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு தற்போது பதிலளித்துள்ள மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.
வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான். பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா?
தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா? ” என ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, Rafale deal, Senthil Balaji