• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுகவின் வீரபாண்டி ராஜா காலமானார்!

திமுகவின் வீரபாண்டி ராஜா காலமானார்!

 திமுகவின் வீரபாண்டி ராஜா காலமானார்!

திமுகவின் வீரபாண்டி ராஜா காலமானார்!

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

  • Share this:
    முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன், வீரபாண்டி ராஜா. இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு, தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டுதால் மயக்கமடைந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து, உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    வீரபாண்டி ராஜா தனது பிறந்தநாள் அன்றே பரிதாபமாக உயிரிழந்துள்ளது திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: