ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'அத்தை கனிமொழி அவர்களே..' அன்போடு அழைத்த உதயநிதி.! புன்முறுவல் பூத்த கனிமொழி!

'அத்தை கனிமொழி அவர்களே..' அன்போடு அழைத்த உதயநிதி.! புன்முறுவல் பூத்த கனிமொழி!

கனிமொழி, உதயநிதி

கனிமொழி, உதயநிதி

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  திமுக துணைப் பொதுச்செயலாளராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அத்தை கனிமொழி அவர்களே” என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்ட சம்பவம் அரங்கில் இருந்தவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.

  சென்னையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின் 15வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்ட ஒன்றிய, நகர, நகரிய , பேரூர், பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

  இதில், திமுகவின் தலைவராக 2-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து துணைப்பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி. தேர்வு செய்யப்பட்டார்.

  இதில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது “புதிதாக துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தை கனிமொழி அவர்களே, தலைவரின் அன்பு தங்கை அவர்களே” என குறிப்பிட்டார்.

  ஒரு பொதுக்குழு எப்படி நடத்த வேண்டும் என்று இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக ஒரு பொதுக்குழுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டு இருக்கிறார் எனவும் கலைஞர் இருந்து இருந்தால் எப்படி தேர்தலை நடத்தி முடித்து இருப்பாரோ அதே போல், உட்கட்சி தேர்தலை ஸ்டாலின் நடத்தி முடித்து உள்ளார் எனவும் புகழாரம் சூடினார்.

  இதையும் வாசிக்க: "அண்ணா.. அப்பா இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன்".. ஸ்டாலினைக் குறிப்பிட்டு கண்கலங்கிய கனிமொழி..!

  தொடர்ந்து பேசிய அவர், “திமுக தொண்டர்களின் உணர்விற்கு உரிமை கொடுக்க வேண்டும். திமுகவில் உள்ள 19 அணிகளுக்கும் இலக்கு கொடுக்க வேண்டும். திமுக இளைஞர் அணிக்கு, திராவிட மாடல் பாசறையை நடத்த கொடுக்கப்பட்ட இலக்கில், கிட்டத்தட்ட 200 தொகுதிகளில் நடத்தி முடித்து உள்ளோம். அதேபோல் அனைத்து அணிகளுக்கும் இலக்கு கொடுக்க வேண்டும்” என கூறினார்.

  மேலும் “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சென்ற தேர்தலை விட அதிக இடங்களை பெற்று வெற்றி பெறுவோம். அதற்கான உத்தரவை எங்களுக்கு நீங்கள் வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: DMK, Kanimozhi, Udhayanidhi Stalin