• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுக இளைஞரணி நிர்வாகி தற்கொலை... மனைவி கைது

திமுக இளைஞரணி நிர்வாகி தற்கொலை... மனைவி கைது

திமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

  • Share this:
    சென்னை ஜாம்பஜார் முகமது ஹுசைன் சந்து பகுதியைச் சேர்ந்தவர் வித்திய குமார் (32). இவர் தி.மு.க 115 வது பகுதி இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன் நிஷா என்ற நிஷாந்தினி (33) என்பருடன் திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வித்திய குமாருக்கும் அவரது மனைவி நிஷாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    கடந்த 4 ஆம் தேதி வீட்டிலிருந்த வித்திய குமார் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஜாம்பஜார் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடம் வந்த போலீசார் வித்திய குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வித்திய குமாரின் செல்போனில் அவரால் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்று கண்டறியப்பட்டது. அந்தப் பதிவில் வித்திய குமார் தனது மனைவி நிஷா, அவரின் சகோதரி உஷா மற்றும் உஷாவின் கணவர் கண்ணன் ஆகியோர் தன்னை பல வகைகளில் துன்புறுத்தி வருவதாகவும், கணவரென்றும் பாராமல் நிஷா தன்னை அடிப்பதாகவும், அவரின் சகோதரி உள்ளிட்ட உறவினர்கள் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்துவதாகவும் வித்திய குமார் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், இதுவரை தான் அவர்களால் பட்ட துன்புறுத்தல்களை தாங்க முடியாமல் தற்போது தற்கொலை முடிவை மேற்கொள்வதாகவும், தனது சாவிற்கு மனைவி நிஷா, உஷா மற்றும் கண்ணன் ஆகிய மூவரும் தான் முழு காரணம் எனவும் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் அவர் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.

    இதனையடுத்து இச்சம்பவம் குறித்து ஜாம்பஜார் போலீசார் வித்திய குமாரின் மனைவி நிஷா மற்றும் அவரின் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வித்திய குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது மனைவி நிஷாந்தினி மீது வழக்குப்பதிவு செய்த ஜாம் பஜார் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: