அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட தொகுதிகள் தகர்ப்பு... ஓ.பி.எஸ்-ன் சொந்த ஊரில் வென்ற திமுக...!

இடைத்தேர்தல் நடந்த பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஆகியவை அதிமுகவின் செல்வாக்கு மிகுந்த பகுதிகளாகும்.

news18
Updated: May 24, 2019, 10:22 AM IST
அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட தொகுதிகள் தகர்ப்பு... ஓ.பி.எஸ்-ன் சொந்த ஊரில் வென்ற திமுக...!
பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணன்
news18
Updated: May 24, 2019, 10:22 AM IST
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான பெரிய குளம் சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவுகளுடன், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளும் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், திமுக 13 இடங்களிலும் அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

சட்டமன்றத்தில் அதிமுகவின் பெரும்பான்மை பலம் ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில், இந்த இடைத்தேர்தல் முடிவுகளே அதிமுகவின் ஆட்சியை தீர்மானிக்கும் வகையில் எதிர்பார்க்கப்பட்டது.


எனினும், 9 இடங்களில் வென்றுள்ள அதிமுக தனது ஆட்சியை தக்கவைத்துள்ளது. இடைத்தேர்தல் நடந்த பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஆகியவை அதிமுகவின் செல்வாக்கு மிகுந்த பகுதிகளாகும்.

குறிப்பாக பெரியகுளம் தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊராகும். இங்கு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் 88393 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுகவின் மயில்வேல் 68073 வாக்குகள் பெற்று இரண்டாம் இடமும், அமமுக வேட்பாளர் கதிர்காமு 26338 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Loading...

First published: May 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...