முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திமுக மாவட்ட அமைப்பு தேர்தல்.. பெண் நிர்வாகிகளிடம் ஆர்வம் குறைவு.. மாவட்ட செயலாளர் பதவிக்கு ஒருவர் மட்டுமே மனுதாக்கல்

திமுக மாவட்ட அமைப்பு தேர்தல்.. பெண் நிர்வாகிகளிடம் ஆர்வம் குறைவு.. மாவட்ட செயலாளர் பதவிக்கு ஒருவர் மட்டுமே மனுதாக்கல்

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

மாவட்ட செயலாளருக்கான போட்டியில் தற்போது வரை ஒரு பெண் நிர்வாகி மட்டுமே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதுவும் தற்போது பொறுப்பில் உள்ள கீதா ஜீவன் மட்டுமே.!

  • Last Updated :
  • Tamil Nadu, India

திமுகவின் 15 வது மாவட்ட அமைப்பு பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22 ஆம் தேதி வரை இன்று வரை நடைபெற்று வருகிறது.

இன்று மாலை 5 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் திமுகவின் மாவட்ட அமைப்பு பொதுத் தேர்தலில், மாவட்ட செயலாளருக்கான போட்டியில் தற்போது வரை ஒரு பெண் நிர்வாகி மட்டுமே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதுவும் தற்போது பொறுப்பில் உள்ள கீதா ஜீவன் மட்டுமே.!

திமுகவின் மாவட்டங்களில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக கீதா ஜீவன் உள்ளார். 72 மாவட்டங்களுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடையவுள்ள நிலையில், மகளிரிடையே மாவட்டச் செயலாளர் பொறுப்பிற்கு ஆர்வமில்லை என தெரிகிறது.

ALSO READ | Chennai Power cut | சென்னையில் செப்டம்பர் 26 முக்கிய பகுதிகளில் மின்தடை!

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு மீண்டும் கீதா ஜீவன் போட்டியிட்டுள்ள நிலையில், வேறு மாவட்டங்களில் போட்டியிட பெண்களிடம் ஆர்வமில்லை என கூறப்படுகிறது. இன்று மாலையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைவதால் பெண் நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வாய்ப்பு மிகக் குறைவு என்றே கூறப்படுகிறது.

First published:

Tags: DMK