• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் இந்தி திணிக்கப்படாது! ஆளுநரின் வாக்குறுதியை ஏற்று தி.மு.க போராட்டம் வாபஸ்

தமிழகத்தில் இந்தி திணிக்கப்படாது! ஆளுநரின் வாக்குறுதியை ஏற்று தி.மு.க போராட்டம் வாபஸ்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்று நான் எந்த நேரத்தில் பேசவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்ததை செய்திவாயிலாக அறிந்தேன்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகத்தில் இந்தி திணிக்கப்படாது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உறுதியளித்ததை அடுத்து திமுக அறிவித்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    உலக அரங்கில் இந்தியாவை அடையாளப்படுத்துவதற்கு இந்தியை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார். அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க சார்பில் செப்டம்பர் 20-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விருப்பம் தெரிவித்திருந்தார். அந்த அழைப்பை மு.க.ஸ்டாலின் பன்வாரிலால் புரோஹித்தைச் ஆளுநர் மாளிகைக்குச் சென்று சந்தித்தார்.

    ஆளுநரைச் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ’இன்று காலை ஆளுநர் என்னை சந்திக்க அழைப்பு விடுத்தார். அழைப்பு ஏற்று ஆளுநரைச் சந்தித்தேன். அமித்ஷா கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தி திணிக்க படாது என்று ஆளுநர் விளக்கமளித்தார். வருகிற 20-ம் தேதி தி.மு.க நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கேட்டறிந்தார். இதற்கிடையில், இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்று நான் எந்த நேரத்தில் பேசவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்ததை செய்திவாயிலாக அறிந்தேன்.

    எனவே, இந்தி திணிப்பு எதிராக அறிவித்த போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்படுகிறது. இந்தி திணப்புக்கு எதிரானப் போராட்டம் தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களுக்கும் பரவும் என்ற காரணத்தால் அமித்ஷா விளக்கம் அளித்திருக்கலாம். இது தி.மு.கவுக்கு கிடைத்த வெற்றி. மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயற்சி செய்தால் அதற்கு எதிராக போராட்டம் நடத்தும்’ என்று தெரிவித்தார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: