Home /News /tamil-nadu /

பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் திமுகவிற்கு கொடுக்கலாம் - எடப்பாடி பழனிசாமி

பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் திமுகவிற்கு கொடுக்கலாம் - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

திமுகவின் இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற வன்முறை சம்பவம் காரணமாக, அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இந்நிலையில் 72 நாட்கள் பிறகு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்குள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.



    அப்போது, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், சென்னை ஆவடியை சேர்ந்த மாணவி லக்‌ஷனா ஸ்வேதா என்பவர் தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நீட் தேர்வு ரத்து செய்வோம் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.

    இதையும் வாசிக்க: ஆவடி அருகே நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலை

    மேலும் திமுகவின் இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறினார். அனால் அவ்வாறு நடைபெறவில்லை, திமுக பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது என விமர்சித்தார். மேலும் பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் திமுகவிற்கு கொடுக்கலாம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

     
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: EPS, Neet, Neet Exam, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி