ஒரு தொகுதியில் திமுகவும், 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டி - மு.க ஸ்டாலின் அறிவிப்பு

ஒரு தொகுதியில் திமுகவும், 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டி - மு.க ஸ்டாலின் அறிவிப்பு
மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: September 21, 2019, 2:04 PM IST
  • Share this:
நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும், விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடும் என்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார், மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆனார். இதனால், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானது.

இதேபோல, விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி கடந்த ஜுன் மாதம் உடல்நலக்குறைவால் காலமானர். இதனால், இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதியன்று இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம்  இன்று அறிவித்துள்ளது. 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் வசம் இருந்த இந்த தொகுதியும் காலியாக உள்ளது.

செப்டம்பர் 30-ம் தேதி முதல் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.நாங்குநேரி தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு, திமுக கொடுக்குமா? அல்லது தானே போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும், விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடும் என்றும்  அறிவித்துள்ளார்.

First published: September 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading