கொங்கு தொகுதிகளில் கொடி நாட்டிய திமுக - 39 ஆண்டுகளுக்கு பின் பொள்ளாச்சியை கைப்பற்றுகிறது

கடந்த 1980 ம் ஆண்டு திமுக வேட்பாளர் சி.டி.தண்டபானி வெற்றி பெற்றிருந்தார்.

கொங்கு தொகுதிகளில் கொடி நாட்டிய திமுக - 39 ஆண்டுகளுக்கு பின் பொள்ளாச்சியை கைப்பற்றுகிறது
மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: May 23, 2019, 4:26 PM IST
  • Share this:
மக்களவை தேர்தலில் 39 ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி தொகுதியில் திமுக வெற்றி பெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. அதனால் மீண்டும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 37 தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. விசிக தலைவர் திருமாவளவன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை மற்றும் பின்னடவை மாறி மாறி சந்தித்து வருகின்றனர்.


பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் சண்முகசுந்தரமும், அதிமுக சார்பில் மகேந்திரனும் போட்டியிட்டனர். அதிமுக, திமுக நேரடியாக போட்டியிடும் 8 மக்களவை தொகுதிகளில் பொள்ளாச்சியும் ஒன்றாகும்.

பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் 18வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் 1,48,967 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இதையடுத்து 39 ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி தொகுதியில் திமுக நேரடியாக வெற்றி பெற உள்ளது.கடந்த 1980-ம் ஆண்டு திமுக வேட்பாளர் சி.டி.தண்டபானி வெற்றி பெற்றிருந்தார். இதன்பின் திமுக கூட்டணியில் 1996-ல் தமாகா, 1999,2004 மதிமுக வென்றது.

இதன் பின்னர் நடந்த இரு தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றிபெற்றிருந்தது. தற்போது, மீண்டும் 39 ஆண்டுகளுக்குப் பின் திமுகவின் வசம் பொள்ளாச்சி தொகுதி வர உள்ளது.

First published: May 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்