தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு - கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிப்பு

தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு - கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிப்பு

அண்ணா அறிவாலயம்

தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

 • Share this:
  தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை சுமூகமாக நடத்தியுள்ளது. அடுத்ததாக கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

  திமுக சார்பில் இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வீதம் 24 தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் வீதம் 3 தொகுதிகள் என தற்போதுவரை 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ன்ட் கட்சிகளுடன் இழுபறி நீடித்தநிலையில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 12-ம் தேதி 19-ம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் 20-ம் தேதியாகும். நாள்கள் குறைவாக உள்ளதாக கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர்களையும் இறுதி செய்யவேண்டிய நெருக்கடியில் உள்ளனர். தி.மு.கவைப் பொறுத்துவரை இன்று ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்படவுள்ளது. அதேபோல, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களையும் இன்று வெளியிட உள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: