• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது.. ஒரே கட்டமாக 173 வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகின்றனர்...

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது.. ஒரே கட்டமாக 173 வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகின்றனர்...

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

திமுக வேட்பாளர் பட்டியல் ஒரே கட்டமாக இன்று வெளியிடப்படுகிறது.

  • Share this:
    tnதமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடித்ததால், திட்டமிட்டபடி வேட்பாளர் பட்டியல் வெளியிட முடியாத சூழல் உருவானது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகள் நேற்றிரவு இறுதி செய்யப்பட்டதால், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து திமுக வேட்பாளர்கள் பட்டியல் காலை 10:30 மணிக்கு வெளியாக உள்ளது. திமுக-வை பொருத்தவரை 173 தொகுதிகளிலும், உதய சூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

    இந்நிலையில், திமுக-வின் தேர்தல் அறிக்கை, நாளை வெளியிடப்படுகிறது. ஏற்கனவே அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். அப்போது, குடும்பத் தலைவிகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    மேலும் படிக்க... தேமுதிக, அமமுக அணிசேராதது ஏன்? குழப்பத்தில் தவிக்கிறதா கமல் கூட்டணி?

    இதையடுத்து, தலா 1500 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், திமுக-வின் தேர்தல் அறிக்கையில் மக்களைக் கவரும் வகையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: