திமுக தொண்டர்கள் கருணாநிதி சிலை முன்பு வேட்புமனு வைத்து ஆர்ப்பாட்டம்

கருணாநிதி சிலை

மதுரையில் உள்ள கருணாநிதி சிலை முன்பு மனு வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

 • Share this:
  திருப்பரங்குன்றம் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டமன்ற திமுக உறுப்பினர் மருத்துவர் சரவணனின் ஆதரவாளர்கள் மதுரையில் உள்ள கருணாநிதி சிலை முன்பு மனு வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

  இதனால், திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணனுக்கு, சீட் வழங்காததை கண்டித்தும், திருப்பரங்குன்றம் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்ததை கண்டித்தும், திமுக எம்.எல்.ஏ சரவணனின் ஆதரவாளர்கள் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கருணாநிதியின் சிலை முன்பு வேட்புமனுவை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில், தற்போது திமுகவை சேர்ந்த சரவணன் சட்டமன்ற உறுப்பினராக உள்ள நிலையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியானது, திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

  Must Read :  திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

   

  நேற்று, திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர், அது குறித்து கருத்து கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வாய்ப்பு கிடைக்காதவர்கள் கவலைபட வேண்டாம் என்றும் அடுத்தடுத்து வேறு பணிகளில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: