ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு தலைப்பாகை கட்டாமல் சென்ற உதயநிதி- வலுக்கும் கண்டனம்

அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு தலைப்பாகை கட்டாமல் சென்ற உதயநிதி- வலுக்கும் கண்டனம்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

அய்யா வழிக்கு என்று ஒரு நடைமுறையை உள்ளது; அதற்கு மாறாக  தலையில் தலைப்பாகை அணியாமல் திருநாமம் விடாமல் பள்ளி அறைக்கு சென்றது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kanniyakumari (Kanyakumari), India

  சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு தலைப்பாகை கட்டாமல் திமுக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின். சென்ற நிலையில், நடைமுறைகளை பின்பற்றவில்லை என கண்டனம் எழுந்துள்ளது.

  கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கோவிலின் பள்ளியறை வரை சென்று தரிசனம் செய்தார். அப்போது சுவாமி தோப்பு தலைமை பதியில்  காலங்காலமாக கடைபிடிக்க பட்டுவரும் தலைப்பாகை மற்றும் திரு நாமத்தை இடாமல் சென்றார்.

  அவருடன் சென்ற அமைச்சர்களும் மேயரும்  தலைப்பாகை அணிந்து சென்றனர். இந்நிலையில் அவரது செயலுக்கு அய்யாவழி மத போதகர் ஶ்ரீ குரு சிவ சந்திர சுவாமிகள்  கண்டனம் தெரவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது,

  ‘கடவுளே இல்லை என்ற கொள்கையை கொண்ட ஒரு கட்சியின் முக்கியமான ஒருவர் இந்த திருநடைக்கு வந்ததை நான் வரவேற்கின்றேன்.

  ஆனால் அய்யா வழிக்கு என்று ஒரு நடைமுறையை உள்ளது; அதற்கு மாறாக  தலையில் தலைப்பாகை அணியாமல் திருநாமம் விடாமல் பள்ளி அறைக்கு சென்றது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்’ என கூறியிள்ளார்.

  இதையும் படிங்க: பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் - அண்ணாமலை உத்தரவு

  இதற்கு முகநூலில் மன்னிப்பு கேட்டு சாமிதோப்பு தலைமை பதி நிர்வாகி பால ஞனாதிபதி  வெளியிட்டுள்ள பதிவில்

  ‘ அய்யா வைகுண்டர் காலடி தொழுது எனது மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.  நான் அழைக்கவில்லை. வருவதாக மேயர் தகவல் சொன்னார். நான் மகிழ்ச்சியுடன் வரவேற்றேன். சட்டையிடாமல் தலைப்பாகையுடன் வரவேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். அதனால் ஏற்றுக் கொண்டேன். ஐந்து நபர்கள் தான் உள்ளே வருவார்கள் என்றார்கள். ஏற்றுக் கொண்டேன்.  நெருக்கடி தள்ளுமுள்ளு வகையற்ற நிலையில் நடந்துவிட்டது.  அய்யாவழியினரைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்’ என பதிவிட்டுள்ளார்

  செய்தியாளர்: ஐ.சரவணன் - நாகர்கோவில்

  Published by:Murugesh M
  First published:

  Tags: DMK, Kanniyakumari, Udhayanidhi Stalin