திருக்குவளையில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு
உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் மே மாதம் வரை 100 நாட்களுக்கு தேர்தல் பரப்புரை செய்ய உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
- News18 Tamil
- Last Updated: November 20, 2020, 8:22 PM IST
தடையை மீறி திருக்குவளையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, அதன்பின் விடுதலை செய்யப்பட்டார்.
உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் மே மாதம் வரை 100 நாட்களுக்கு தேர்தல் பரப்புரை செய்ய உள்ளார். இதனை முன்னிட்டு இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு மரியாதை செலுத்தி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
திருக்குவளையில் உள்ள கலைஞர் வீட்டு வாசலில் அமைக்கப்பட்ட மேடையில் தொண்டர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, முக.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவிற்கு புகட்டிய பாடத்தை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காட்டவேண்டும்“ என்றார். இதை தொடர்ந்து தடையை மீறி தேர்தல் பரப்புரை மேற்கொண்டதாக உதயஸ்டாலின் மற்றும் அவருடன் பங்கேற்ற திமுக கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன், நாகை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். சிறிது நேரம் தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கபட்டிருந்த அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் மே மாதம் வரை 100 நாட்களுக்கு தேர்தல் பரப்புரை செய்ய உள்ளார். இதனை முன்னிட்டு இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு மரியாதை செலுத்தி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
திருக்குவளையில் உள்ள கலைஞர் வீட்டு வாசலில் அமைக்கப்பட்ட மேடையில் தொண்டர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, முக.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவிற்கு புகட்டிய பாடத்தை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காட்டவேண்டும்“ என்றார்.
நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்