ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உதயநிதியை பிராண்டிங் பண்றாங்க.. திமுகவில் அங்கீகாரம் இல்லை: பாஜகவில் இணைந்த திருச்சி சிவா மகன் பேச்சு

உதயநிதியை பிராண்டிங் பண்றாங்க.. திமுகவில் அங்கீகாரம் இல்லை: பாஜகவில் இணைந்த திருச்சி சிவா மகன் பேச்சு

சூர்யா சிவா

சூர்யா சிவா

Surya Siva: பதவியை வேண்டி பாஜகவில் இணையவில்லை. திமுகவில் சபரீசன் ஒரு பக்கம் அரசியல் செய்கிறார், உதயநிதி ஒரு பக்கம், கனிமொழி ஒரு பக்கம் என முக்கோண அரசியல் உள்ளது - சூர்யா சிவா

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  திமுகவில் உதயநிதியை பிராண்டிங் செய்வதாகவும் அக்கட்சியில் உரிய அங்கீகாரம் இல்லை என்றும் பாஜகவில் இணைந்த திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.

  திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா நேற்று பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைவதற்கு முன்பாக நியூஸ்18 தமிழ்நாடு ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், திமுகவில் 15 வருடமாக உழைத்த எனக்கு கட்சியில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. திமுக சர்வாதிகாரத்துடன் செயல்படுவதால் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

  திராவிட மாடல் ஆட்சியில் கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் என்பதற்காக அங்கீகாரம் தராமல் உள்ளார்கள். ஆனால், பிராமண பார்வையில் பார்க்கக்கூடிய பாஜக கட்சியில் அதுபோன்ற சூழல் இல்லை என்பதை நான் இணைவது மூலம் உணர முடிகிறது என கூறியிருந்தார்.

  நேற்று மாலை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சூர்யா சிவா தன்னை அக்கட்சியில் இணைத்துகொண்டார். அவருக்கு பாஜக துண்டை அணிவித்து அடிப்படை உறுப்பினர் அட்டையை அண்ணாமலை வழங்கினார்.  கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  இதையும் படிங்க: பிரிவினைவாத எண்ணம் கொண்டவர்களின் கருத்துக்கள் தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்படுகிறது - நிர்மலா சீதாராமன்

  இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூர்யா சிவா, தமிழகத்தில் முதலமைச்சர் பதவியை கூட பாஜக பெறும். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரிய வெற்றியை பெறும்.  திமுகவில் அங்கீகரிக்கப்படவில்லை என வருத்தம் உள்ளது. குடும்ப ரீதியிலான சில பிரச்சனைகளும் உள்ளன. உழைப்புக்கு அங்கீகாரம் குடுக்கும் இடத்தில் இணையவேண்டும் என்பதால் பாஜகவில் இணைந்தேன். நிர்வாகிகளை ஊக்குவிக்கும் தலைவராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளார்.

  பதவியை வேண்டி பாஜகவில் இணையவில்லை. உழைப்புக்கான அங்கீகாரம் மட்டுமே கொடுங்கள் என கேட்டுள்ளேன். திமுகவில் சபரீசன் ஒரு பக்கம் அரசியல் செய்கிறார், உதயநிதி ஒரு பக்கம், கனிமொழி ஒரு பக்கம் என முக்கோண அரசியல் உள்ளது.  உதயநிதியை பிராண்டிங் செய்ய வேண்டும் என்பதற்காக அவரது வட்டத்தை வளர்க்கிறார்கள். அவரின் ஆதரவாளர்களுக்கு பதவிகள் கொடுக்கின்றனர்.

  இதையும் படிங்க: பட்டினப் பிரவேசம் வருகின்ற 22-ஆம் தேதி சிறப்பாக நடைபெறும் - தருமபுரம் ஆதீனம் பிரத்யேகப் பேட்டி

  பாஜகவில் இணைவதற்கு முன்பாக கனிமொழி நம்பரில் இருந்து 3 முறை போன் வந்தது. எனினும் நான் அதனை எடுக்கவில்லை.  நான் பாஜகவில் இணைந்ததை அங்கீகரிக்கும் இடத்தில் எனது தந்தை திருச்சி சிவா இல்லை. அண்ணாமலை ஏற்றுக்கொண்டார் அது போதும்’ என பேசினார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Annamalai, BJP, DMK, Trichy Siva