உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அயோக்கியத்தனமானது - துரைமுருகன் ஆவேசம்!

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அயோக்கியத்தனமானது - துரைமுருகன் ஆவேசம்!
துரைமுருகன்
  • Share this:
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அயோக்கியத்தனமானது என்றும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்கும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை திமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், “உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தமாக தேர்தலை நடத்தாமல், பிரித்து நடத்துவது தமிழக அரசின் கையாளாகாத தனத்துக்கு எடுத்துக்காட்டு. இந்த தேர்தல் அறிவிப்பு அயோக்கியத்தனமானது.


தேர்தலை நிறுத்த யாராவது நீதிமன்றத்தை நாடமாட்டார்களா? என்ற எண்ணத்தில் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அதிகாரிகள் மூலம் அரசு கொள்ளை அடித்து வருகிறது. அது தடைபடாமல் இருக்க நிச்சயம் இந்த அரசு மாநகராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்காது.

இன்று அறிவித்த அறிவிப்பு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுடன் கலந்து ஆலோசித்து உச்ச நீதிமன்றம் செல்வது குறித்து ஆலோசிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்