ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் திடீர் சந்திப்பு

சந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் திடீர் சந்திப்பு

சந்திரபாபு நாயுடுவை சந்தித்த துரைமுருகன்

சந்திரபாபு நாயுடுவை சந்தித்த துரைமுருகன்

ஒரு வாரத்தில் தேர்தல் முடிவுகள் வெளி வர உள்ள நிலையில், சந்திரசேகர ராவை தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவும் திமுகவின் முக்கிய தலைவர்களை சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்தித்த நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்து பேசியுள்ளார்.

3-வது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நேற்று முன்தினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சந்திப்புக்கு இரு தலைவர்களுமே செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்தனர். மேலும், இந்த சந்திப்பு குறித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என தெரிவித்தார்.

இந்நிலையில், குடும்பத்துடன் ஆந்திராவுக்கு சென்றிருந்த திமுக பொருளாளர் துரைமுருகன், அமராவதி நகரில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது, தேர்தல் முடிவுக்கு பிந்தைய நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வரும் 21-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், இருவரின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து பேசியுள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சந்திரபாபு நாயுடுவை துரைமுருகன் சொந்த விஷயமாக சந்தித்தாகவும், இது அரசியல் சந்திப்பு இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் முடிவுகள் வெளி வர உள்ள நிலையில், சந்திரசேகர ராவை தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவும் திமுகவின் முக்கிய தலைவர்களை அடுத்தடுத்து சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Also see... தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவுடன் திமுக பேசியது உண்மைதான்! தமிழிசை கூறியது என்ன?

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: Andhra Pradesh, Chandrababu naidu, DMK, Duraimurugan, Elections 2019, Lok Sabha Election 2019