ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆளுநர்.. குடியரசுத் தலைவரை நாடும் திமுக...!

சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆளுநர்.. குடியரசுத் தலைவரை நாடும் திமுக...!

ஆளுநர் வெளிநடப்பு

ஆளுநர் வெளிநடப்பு

தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கிய உரையில் சில பகுதிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவிர்த்த நிலையில், இதுகுறித்து குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவுசெய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் உரையாற்றிய ஆளுநர், தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். இதையடுத்து, ஆளுநருக்கு எதிராக, முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக படிக்காதது, பேரவையில் தேசிய கீதம் இசைக்கும் முன்பாகவே ஆளுநர் வெளியேறியது உள்ளிட்ட விவகாரங்களை அவை விதிமீறல்களாக திமுக கையில் எடுத்துள்ளது.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-விடம் இன்று முறையிட திமுக திட்டமிட்டுள்ளது. அப்போது, ஆளுநரை திரும்பப் பெறுமாறு வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் டெல்லி செல்கின்றனர். எனினும், குடியரசுத் தலைவரை சந்திப்பதற்கான நேரம் உறுதியாகவில்லை.

First published:

Tags: CM MK Stalin, DMK, RN Ravi