தர்மபுரி மாவட்டத்தில் கனிம வளங்களை எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் எம்பி வழக்கு

தர்மபுரி மாவட்டத்தில் கனிம வளங்களை எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ரத்து செய்ய கோரி திமுக முன்னாள் எம்பி தாமரை செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் கனிம வளங்களை எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் எம்பி வழக்கு
சென்னை உயர்நீதிமன்றம்.
  • News18
  • Last Updated: September 21, 2020, 5:15 PM IST
  • Share this:
தர்மபுரி மாவட்டத்தில் காப்பர், இரும்பு, கருப்பு கிரானைட் உள்ளிட்ட கனிமங்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பென்னாகரம், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களில் கருப்பு கிரானைட் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் கடந்த ஜூன் 3 தேதி வெளியிட்டார்

அதில் ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 28 ம் தேதி என தெரிவிக்கப்பட்டிருந்தது. கருப்பு கிரானைட் எடுப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையின்மை சான்று பெற வேண்டும். அதன் பின்னர் தான் மாநில அரசு ஏல அறிவிப்பை வெளியிட வேண்டும் என விதிகள் உள்ளன.Also read... அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு - பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்..


ஆனால் இந்த விதிகள் எதையும் பின்பற்றாமல் தமிழக அரசு வெளியிட்டுள்ள ஏலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் புதிய ஏல அறிவிப்பை விதிகளை பின்பற்றி வெளியிடக் கோரி தர்மபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
First published: September 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading