Home /News /tamil-nadu /

வட்டாட்சியர் சம்பூர்ணம் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் - திமுக எம்.பி. ஆர்.எஸ் பாரதி

வட்டாட்சியர் சம்பூர்ணம் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் - திமுக எம்.பி. ஆர்.எஸ் பாரதி

திமுக எம்.பி. - ஆர். எஸ். பாரதி

திமுக எம்.பி. - ஆர். எஸ். பாரதி

வட்டாட்சியர் சம்பூர்ணத்திற்கு திமுக எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்று ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த விவகாரத்தில் வட்டாட்சியர் சம்பூர்ணம் பலிகடாவாக்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலை நடத்தவிடாமல் ஆளுங்கட்சி திட்டமிட்டதாகவும், ஆனால், தேர்தலை நடத்த நீதிமன்றத்தின் மூலம் அனுமதி வாங்கியது திமுகதான் என்றும் கூறினார்.

மேலும் மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் நேர்மையான அதிகாரி என்றும் இந்த விவகாரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியே குற்றவாளி என்றும் ஆர்.எஸ் பாரதி கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், உதவி ஆட்சியராக சம்பூர்ணம் பதவி உயர்வு பெற உள்ள நிலையில், அவர் பழி வாங்கபட்டுள்ளதாகவும், அவருக்கு திமுக எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் கூறினார்.

கலால் வட்டாட்சியர் சம்பூர்ணத்தை தொடர்ந்து 3 பேரை பணியிடைநீக்கம்  செய்து ஆட்சியர் நடராசன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்கு சென்ற விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட்

Also see... சீலிடப்பட்ட அறைக்குள் வட்டாட்சியர் செல்லலாமா? - தேர்தல் 

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: DMK, Lok Sabha Election 2019, Madurai, RS Barathi, Tamil Nadu Lok Sabha Elections 2019

அடுத்த செய்தி