தமிழக அமைச்சர்கள் 8 பேர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய 97 பக்க புகார் மனுவை ஆளுநரிடம் திமுக வழங்கியுள்ளது.
சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் சந்தித்தனர்.
அப்போது, தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சி, மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் 8 அமைச்சர்கள் மீது 97 பக்க ஊழல் புகார்கள் அடங்கிய மனுவை அளித்தனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், முதலமைச்சர் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார். ஊழல் புகார்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுள்ளதாகவும் அவர் கூறினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.