முகப்பு /செய்தி /தமிழ்நாடு / துணைப் பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை முடிவு?

துணைப் பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை முடிவு?

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி , ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் உள்ள நிலையில் , மேலும் இரண்டு பேரை நியமித்து மொத்தம் 7 துணை பொதுச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

விரைவில் நடைபெற உள்ள திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவில் உள்ள பல்வேறு நிலைகளுக்கும் தேர்தல் நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட அமைப்புகளுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை முதல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தல் முடிவு பெற்று புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின், அக்டோபர் இரண்டாவது வாரத்தில் திமுகவின் அதிகாரமிக்க பொதுக்குழு கூட்டம் கூட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பொதுக்குழு கூட்டத்தில் திமுகவில் தற்போதுள்ள ஐந்து துணை பொதுச்செயலாளர்களில் கூடுதலாக இரண்டு பேரை நியமிக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: திமுக அரசை கண்டித்து பாஜக சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு...

தற்போது திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி , ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் உள்ள நிலையில் , மேலும் இரண்டு பேரை நியமித்து மொத்தம் 7 துணை பொதுச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில் திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்த மு.பெ.சாமிநாதன் ஒரு துணைப் பொதுச் செயலாளராகவும், மற்றொரு துணை பொதுச்செயலாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் மற்றும் எ.வ.வேலு இருவருக்கும் இடையே கடுமையான போட்டி உள்ள நிலையில் ஜெகத்ரட்சகன் அந்த ரேசில் வெல்வார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கனவே நேற்றைய தினம் துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்துள்ள நிலையில் அவருடைய இடத்திற்கு ஒரு பெண் துணை பொது செயலாளர் நியமனம் செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Anna Arivalayam, DMK, MK Stalin