ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தவேண்டும் - தி.மு.க கோரிக்கை

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தவேண்டும் - தி.மு.க கோரிக்கை

புகாரளித்த தி.மு.கவினர்

புகாரளித்த தி.மு.கவினர்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை தற்காலிகமாக நிறுத்தவேண்டும் என்று தி.மு.க கோரிக்கைவைத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் பணபட்டுவாடாவை தடுக்காமல் காவல் துறையினர் துணை போவதால் தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என அந்த தொகுதி தி.மு.க வேட்பாளரின் தலைமைத் தேர்தல் முகவரும், திமுக வழகறிஞருமான மயில்வாகனம் வலியுறுத்தியுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் உள்ள மளிகைக் கடையில் வைத்து நேற்று இரவு அ.தி.மு.கவினர் பணப்பட்டுவாடா செய்து வந்ததாக கூறப்படுகின்றது. இதுதொடர்பாக தி.மு.கவினர் தேர்தல் அதிகாரிகளுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினரும் பறக்கும் படை அதிகாரிகளும் மளிகைக் கடை உரிமையாளர் தங்கராஜை பிடித்து குனியமுத்தூர் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இந்தசம்பவம் குறித்து தகவல் அறிந்த தொண்டாமுத்தூர் தொகுதி தி.மு.க தலைமை முகவரும், வழக்கறிஞருமான மயில்வாகனம் காவல் நிலையம் சென்றபோது, அங்கிருந்த காவல் துறையினர் அவரை விரட்டியடித்துள்ளனர். வழக்கறிரும், தி.மு.க தலைமை முகவருமான மயில்வாகனம் தனக்கு என்ன நடந்தது என சொல்லாமல் காவல் துறையினர் மிரட்டுவதால் தொண்டாமுத்தூர் தொகுதியில் நியாயப்படி தேர்தல் நடைபெறாது எனவும் இந்த தொகுதியில் தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். குனியமுத்தூர் காவல் நிலையம், அமைச்சர் எஸ்.பி்.வேலுமணியின் இல்லம் போல செயல்படுவதாகவும், அந்த காவல் நிலைய செயல்பாடுகள் அ.தி.மு.கவிற்கு சாதகமாகவே இருப்பதாகவும் தி.மு.கவினர் குற்றம்சாட்டினர்.

மேலும் பணப் பட்டுவாடா செய்யப்பட்ட இருந்த இடத்தில் இருந்து பல லட்சம் ரூபாய் கைபற்றபட்டதாக சொல்லப்பட்ட நிலையில் 13 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் பறிமுதல் என காவல் துறையினர் சொல்வதாகவும் இது நம்பும்படி இல்லை என தெரிவிக்கும்  திமுகவினர், பணம் பறிமுதல் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் எனவும் தி.மு.கவினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதி அனைவராலும் உற்றுக் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், அ.தி.மு.கவினரின் பணப்பட்டுவாடா காரணமாக இந்த தொகுதியில் தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என தி.மு.கவினர் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Karthick S
First published:

Tags: ADMK, DMK, Minister sp velumani, TN Assembly Election 2021