காஷ்மீரி சகோதரர்களுக்கு தி.மு.க துணை நிற்கும்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைப்பு செய்யும் மத்திய அரசின் முடிவு ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது.

news18
Updated: August 5, 2019, 10:44 PM IST
காஷ்மீரி சகோதரர்களுக்கு தி.மு.க துணை நிற்கும்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மு.க.ஸ்டாலின்
news18
Updated: August 5, 2019, 10:44 PM IST
காஷ்மீரி சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு தி.மு.க துணையாக இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவை நீக்குவதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கான மசோதாவை மாநிலங்களவை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு தி.மு.க சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


Loading...


இந்தநிலையில், இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘பணிந்து போகும் ஆளுநரின் உதவியுடன் சட்டப் பிரிவு 370-வது பிரிவை நீக்குவது, மாநிலத் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்துவிட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைப்பு செய்யும் மத்திய அரசின் முடிவு ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது.


மத்திய அரசின் முடிவைத் துரிதப்படுத்தும் செயலை இந்திய குடியரசுத் தலைவர் மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்துகிறேன். இதுதொடர்பாக, ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும் வரை மேற்கொண்ட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. காஷ்மீரி சகோதரர்கள், சகோதரிகளுக்கு தி.மு.க துணை நிற்கும். இந்திய கூட்டாச்சியின் மீது நடைபெறும் எந்த தாக்குதலுக்கு எதிராக தி.மு.க நிற்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...