7.5% இடஒதுக்கீடு: ஆளுநரைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவும், ஆளுநருக்கு போதிய அழுத்தம் தர மாநில அரசை வலியுறுத்தியும் திமுக சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றுவருகிறது.

7.5% இடஒதுக்கீடு: ஆளுநரைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
திமுக போராட்டம்
  • Share this:
மருத்துவப் படிப்பில் சேர அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடந்த 21ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடிதத்திற்கு பதில் அளித்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மசோதா தொடர்பாக முடிவெடுக்க தனக்கு மூன்று முதல் நான்கு வார கால அவகாசம் தேவைப்படுகிறது என பதிலளித்திருந்தார். மாணவர்களின் கல்வி விவகாரம் எனவே உடனே ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் அதிகமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் சென்னை சைதாப்பேட்டையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


திமுகவினரின் போராட்டம் காரணமாக போராட்டம் நடைபெறக்கூடிய பகுதியில் இணை ஆணையர் பாபு தலைமையில் 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
First published: October 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading