ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''அண்ணாமலை ஒரு கோமாளி அரசியல்வாதி''.. திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி விமர்சனம்!

''அண்ணாமலை ஒரு கோமாளி அரசியல்வாதி''.. திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி விமர்சனம்!

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழக அரசு மீது குற்றச்சாட்டி அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி பதில்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக தினமும் அறிக்கை விட்டுக்கொண்டு ஒரு கோமாளித்தனமான நடவடிக்கையில் அண்ணாமலை இறங்கி இருப்பதாக திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

  கோவை கார் வெடிப்பு தொடர்பாக தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசு மீது குற்ற குற்றச்சாட்டுகளை வைத்து தான் ஆதாரங்களுடன் வெளியிட போவதாக நேற்று கூறி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டர்.

  இந்நிலையில் அண்ணாமலையின் அறிக்கை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி ''தினந்தோறும் தனக்கு அறிக்கையை வேண்டும் என்ற முறையில் தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக தினமும் அறிக்கை விட்டுக்கொண்டு ஒரு கோமாளித்தனமான நடவடிக்கையில் அண்ணாமலை இறங்கி இருக்கிறார். கார் வெடிப்பில் அண்ணாமலை அரசியல் செய்கிறார். இன்று மதியம் வந்த அறிக்கை காவல்துறையை களங்கப்படுத்துவதாகவும், காவல்துறையை கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது.

  இதையும் படிங்க: முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் தமிழக உளவுத்துறை கோட்டை விட்டுள்ளது - அண்ணாமலை மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு

  கோவையில் 23ஆம் தேதி காலை நான்கு மணிக்கு விபத்து நடந்ததாக சொல்லப்படும் போது முதலில் போய் அந்த எரிந்த காரை கைப்பற்றிய காவல்துறை நண்பர் அவர் எந்த ஜாதி, எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது யாருக்குமே தெரியாது. தன்னுடைய உயிரை பணயம் வைத்து தன்னுடைய காவல்துறை வேலையை செய்த காவல் அதிகாரிகளை இந்த சாதி, இந்த மதம், அதனால் சரியில்லை என்ற உளறல்களை அண்ணாமலை செய்து கொண்டிருப்பதாக கூறினார்.

  உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் பாபர் மசூதி இடிப்புக்கு பின்பு கோவை பகுதி மத அடிப்படைவாதிகளுடைய ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளான பின்பு ஒரு அரசியல் கட்சியாக ஒரு சம்பவம் நடந்தால் அந்த மக்களிடம் போய் விளக்க வேண்டியதும், மக்கள் சமூக நல்லிணக்கம் பெற இணக்கமான சூழலை கொண்டு வருவதுதான் அரசியல் கட்சியின் வேலை என்று கூறினார்.

  இதையும் படிங்க: 12 பேருக்கு சம்மன்.. திருச்சி ராமஜெயம் கொலைவழக்கில் புலனாய்வுக்குழு முக்கிய முடிவு!

  ஆனால் அதற்கு மாறாக கோமாளித்தனமாக பந்த் நடத்துகிறோம், யாரும் தொழில் செய்யாதீர்கள், கடையை திறக்காதீர்கள் என்றால், இன்னைக்கு இருக்கக்கூடிய சூழலில் சென்னைக்கு அடுத்து வளர்ந்து வரக்கூடிய தொழில் நகரமான கோவையில் இனிமேல் யாரும் தொழில் செய்யாதீர்கள் என்பதைபோல் கோவையை எப்போதும் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக பதற்றமாக வைத்திருக்கக்கூடிய அண்ணாமலை போன்ற அரசியல் அனுபவம் இல்லாதவர்களுடைய செயல் மிகவும் வெட்கக்கேடான செயல் என ராஜீவ்காந்தி விமர்சித்தார்.

  மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமையும் இந்த வழக்கை நடத்துகிறது. ஒப்படைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகின்றது. ஆனால் பிரதமர் மோடி இதுவரை ஏன் பேசவில்லை என்ற கேள்வி கேட்டால் எப்படி பால்வாடித்தனமாக இருக்குமோ அது போன்ற பால்வாடித்தனமான அரசியலைத் தான் அண்ணாமலை செய்து கொண்டு வருவதாக அண்ணாமலையை கடுமையாக ராஜீவ்காந்தி விமர்சித்தார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Annamalai