எம்.பி. தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு ₹40 கோடி கொடுத்துள்ளது திமுக! பிரமாணப் பத்திரத்தின் முழு விவரம்

பிரச்சாரத்துக்கான பயணச் செலவாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டும் 58 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது.

எம்.பி. தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு ₹40 கோடி கொடுத்துள்ளது திமுக! பிரமாணப் பத்திரத்தின் முழு விவரம்
அறிவாலயம்
  • News18
  • Last Updated: September 24, 2019, 10:32 PM IST
  • Share this:
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலின்போது 40 கோடி ரூபாய் வழங்கியதாக இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தி.மு.க தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சி சார்பில் செய்யப்பட்ட செலவு குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தி.மு.க சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த பிரமாணப் பத்திரத்தில், ‘நாடாளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க 79 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. அதில், 40 கோடி ரூபாயை மூன்று கட்சிகளுக்கு வழங்கினோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடி ரூபாயும், கொங்கு நாடு தேசிய கட்சிக்கு 15 கோடி ரூபாயும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.


சி.பி.ஐ, ஏப்ரல் 5, 16-ம் தேதிகளில் பணத்தைப் பெற்றுக்கொண்டது. சி.பி.எம் ஏப்ரல் 5,6, 9-ம் தேதிகளில் பெற்றுக்கொண்டது. கொங்கு மக்கள் தேசியக் கட்சி ஏப்ரல் 8-ம் தேதி பெற்றுக்கொண்டது. பிரச்சாரத்துக்கான பயணச் செலவாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டும் 58 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. மற்ற தலைவர்களுக்கு 35 லட்ச ரூபாய் கட்சி சார்பில் செலவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மக்களவைத் தொகுதி வேட்பாளர்களுக்கும் தி.மு.க சார்பில் 50 லட்ச ரூபாயும், சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களுக்கு 25 லட்ச ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது. ஊடக விளம்பரத்துக்காக 15 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

Also see:
First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading