வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது! முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.கவை கடுமையாக சாடிய கனிமொழி

வாக்கெடுப்பின்போது, அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேரும் வெளிநடப்பு செய்தனர். அதேபோல, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

news18
Updated: July 31, 2019, 9:12 AM IST
வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது! முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.கவை கடுமையாக சாடிய கனிமொழி
கனிமொழி
news18
Updated: July 31, 2019, 9:12 AM IST
முத்தலாக் தடை மசோதா மீது மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றபோது அ.தி.மு.க வெளிநடப்பு செய்ததற்கு தி.மு.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் கடந்த 25-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் தடை மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் முத்தலாக் தடை மசோதாவை கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

அந்த மசோதா தொடர்பான விவாதத்தின்போது, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவாதத்துக்குப் பிறகு, மாலையில் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு மசோதா குரல் வாக்கெடுப்பு நடத்தினார். மசோதாவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகின.


அதனால், மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்பின்போது, அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேரும் வெளிநடப்பு செய்தனர். அதேபோல, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க மற்றும் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்திருந்தால் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியிருக்காது.

ஆனால், எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், எதிராக வாக்களிக்காமல் புறக்கணித்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


இதுதொடர்பாக தி.மு.க எம்.பி கனிமொழி ட்விட்டர் பதிவில், ‘முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக ராஜ்ய சபாவில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது’ என்று பதிவிட்டுள்ளார். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர்.

Also see:

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...